தனுஷ் தொடர்பான வழக்க்கின் தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தனுஷ் மேலூர் தம்பதி வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனுஷ் தரப்பு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில், மார்ச் 27-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கதிரேசன் தம்பதி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினர்.
மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக போதிய கால அவகாசம் வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைக் கவனத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை வரும் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது . அப்போது மேலூர் தம்பதி கதிரேசன் -மீனாட்சி தரப்பு வழக்கறிஞர், “தனுஷ் தொடர்பான வழக்கில் ஆவணங்களில் குளறுபடி உள்ளது” என்று வாதாடினார். இதனையடுத்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.