பிரபல மலையாள நடிகர் திலீப். இவரும் நடிகை மஞ்சுவாரியரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார்.
இந்த நிலையில் திலீப் – மஞ்சுவாரியர் இடையே கருத்துவேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது. இதன் பிறகு அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு திலீப்பின் பராமரிப்பில் அவரது மகள் இருந்து வருகிறார். மேலும் நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-ம் திருமணமும் செய்து கொண்டார்.
மஞ்சுவாரியருடன் குடும்பம் நடத்தி வந்தபோதே திலீப்புக்கும் காவ்யாமாதவனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அப்போது திரையுலகில் கிசுகிசு நிலவியபோது அவர்கள் இருவரும் அதை மறுத்தனர். மஞ்சுவாரியரை விவாகரத்து செய்தபிறகு காவ்யாமாதவனை திருமணம் செய்யப்போவது பற்றியும் பரபரப்பு கிளம்பியது. அதையும் அவர்கள் மறுத்தனர். ஆனால் திடீரென்று திலீப்பும், காவ்யா மாதவனும் திருமணம் செய்துகொண்டனர்
இந்த நிலையில் நடிகர் திலீப் தனது 2-வது திருமணம் தொடர்பாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் மஞ்சுவாரியரை விவாகரத்து செய்துவிட்டு காவ்யாமாதவனை 2-வது திருமணம் செய்துகொண்டதற்கு என் மீது எனது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதை நான் அறிவேன். பலரும் இதுதொடர்பாக எங்களைபற்றி தவறாக பேசினார்கள்.
நான் கோர்ட்டு மூலம் முறைப்படி விவாகரத்து பெற்றுதான் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு 16 வயதில் மகள் உள்ளார். 16 வயது பெண்ணின் மனநிலை என்ன என்பது எனக்கு தெரியும். எனவே எனது மகளின் சம்மதம் பெற்றுதான் இந்த திருமணத்தை செய்தேன்.
முதலில் இந்த திருமணத்திற்கு காவ்யா மாதவனின் தாயாருக்கு விருப்பம் இல்லை. என்னிடமே காவ்யா மாதவனுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கும்படி கூறினார். ஆனால் எங்களை இணைத்து பேசப்பட்ட அவதூறுகளை மாற்றவே நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.