சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக நேற்று புதுடெல்லி வந்தார்.
அவருடன் ஆஸ்திரேலிய நாட்டின் கல்வித்துறை மற்றும் தொழில் பயிற்சித்துறை மந்திரி சைமன் பிரிமிங்ஹம், ஆஸ்திரேலிய நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட பெரிய குழுவினரும் வந்துள்ளனர்.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை மால்கோம் டர்ன்புல் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மால்கம் டர்ன்புல் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் பிரமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பிராத்தனை செய்தனர்.
விவசாயிகள் பிரச்சனை இருக்கும் போது அவர்களை சந்திக்காமல் மோடி ஆஸ்திரேலிய பிரதமருடன் செல்பி எடுப்பது போன்ற போட்டோ வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் பிரமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பிராத்தனை செய்த போட்டோகளை வைத்து,
இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக காலக்சி என்ற ஆங்கில இணைய பத்திரிக்கை ஒரு கட்டுரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.