இலங்கையில் அரச சார்பற்ற அமைப்புகளை அச்சுறுத்தும் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினால், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவிவருவதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அண்மைய அமர்வின் பின்னர் இலங்கையின் மனித உரிமைகள் பணியாளர்களான சுனந்த தேசப்பிரிய மற்றும் நிமல்கா பெர்னான்டோ ஆகியோர் மோசமான அவதூறுப் பரப்புரைகளை எதிர்கொண்டிருந்தமையும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.