கடந்த 6 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்க வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்து புதுவண்ணாரப்பேட்டையில் தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே மு.க.ஸ்டாலின் மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஆர்.கே. நகரில் பண விநியோகம் மற்றும் இதர முறைகேடுகளில் ஈடுபட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்தோடு, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த காலத்திலும் ஊழல் களில் ஈடுபட்டுள்ளார்.
எனவே சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு காரணமான தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.