தமிழ் புத்தாண்டு, விஷூ, பைசாகி, வைசாகாதி, ரொங்காலி பிஹூ மற்றும் நபா பர்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘என் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் விஷு, போஹக் பிஹு, பொய்லா பொய்ஷாக் ஆகிய பெயர்களில் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.