புத்தாண்டு மரபுகளைப்பேணி சகோதரத்துவத்துடன் இப்புத்தாண்டினை இலங்கையர் அனைவரும் கொண்டாட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
“மனிதனின் நன்றி தெரிவிக்கும் இயல்பினை வெளிப்படுத்தும் முகமாகவே புத்தாண்டு மரபுகள் காணப்படுகின்றன. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவின் தொடர்புகளையே நாம் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றோம்.
நாட்டில் நிலவும் சமாதானமான சூழ்நிலையினை நாம் தொடர்ந்தும் நிலைத்திருக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் சேர்ந்து செயற்பட வேண்டும். அனைவருக்கும் சொளபாக்கியமும், சமாதானமும் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.