பிறந்துள்ள புது வருடத்தில் புது ஆட்சி ஒன்றினை அமைக்க அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாமல் ராஜபக்ச முகநூல் ஊடாக கூறியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் நாட்டின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் காப்பதோடு அரச சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும்.
அத்துடன் எமது கலாச்சார பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
அதேபோன்று பிறந்துள்ள புது வருடத்திற்குள் புது ஆட்சி ஒன்றினையும் அமைக்க அனைவரும் எம்மோடு கைகோர்த்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.