ஹெய்ட்டியில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கையின்அமைதி காப்பு படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும்அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.
பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்கள் எங்கிருந்துசென்றிருந்தாலும் அவர்கள் பொறுப்புக்களை ஏற்க வேண்டியவர்களாக உள்ளனர் என்று ஐக்கியநாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குதரப்படவில்லை.
இந்தநிலையில் இலங்கையுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்பு கொண்டு உண்மைவிடயத்தை அறியுமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், வலியுறுத்தியுள்ளதாக பேச்சாளர்குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைதிகாப்பு படையில் அங்கம் வகிக்கப்போகும் படையினரை அனுப்பும்போதுஅவர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் ஐக்கியநாடுகளுக்கான தூதுவர் நிக்கி ஹாலி கோரியுள்ளார்.
2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு காலப்பகுதியில் ஹெய்ட்டியில் சிறுவர்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக 134 இலங்கை அமைதி காப்பு படையினர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை திரும்பியுள்ள இந்த படையினரின் எவரேனும் இதுவரை இலங்கையில்தண்டிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவரின் தகவல்படி நாளொன்றுக்கு நால்வர் என்ற ரீதியில் தாம்பணத்துக்காக 100 படையினருடன் பாலியல் உறவைக் கொண்டிருந்ததாக விசாரணையின் போதுதெரிவித்தார் என்று செய்திச்சேவை ஒன்று கூறுகிறது.