உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் தமிழ் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடிவரும் நிலையில், ஈழத் தமிழர்கள் இன்றைய புதுவருடத்தை புறக்கணித்து, போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டம் இன்று கறுப்புப்பட்டி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய புதுவருட தினத்தை ஒரு துக்கதினமாக அறிவித்துள்ள போராட்டக்காரர்கள், கறுப்பு ஆடையுடன் கறுப்பு பட்டியணிந்து, தொலைந்த தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோரைத் தேடும் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி இன்று 54வது நாளாகவும் நீடிக்கின்றது.
காணாமல் போனோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தமது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.