Loading...
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
47 வயதான மகாதேவன் தஞ்சாவூரில் வசித்து வந்துள்ளார்.
திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்ற மகாதேவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கும்பகோணம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
Loading...
சசிகலாவின் 2 ஆவது அண்ணன் வினோதகன். இவரின் மகனே மகாதேவன் ஆவார்.
தஞ்சை தனியார் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மகாதேவன் ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...