தங்களை அடித்த இளைஞர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் ஆத்திரப்படவில்லை. துப்பாக்கியை கையில் வைத்திருந்தும் அதை காட்டி மிரட்டவும் இல்லை. அடியை வாங்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நடந்து சென்றார்கள். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பார்த்தவர்களை பதற வைத்தது. தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், கம்பீர் ஆகியோர் ஏற்கனவே கண்டித்து உள்ளனர்.
இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசனும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவுடன் ஒருங்கிணையுங்கள். என்னுடைய பாதுகாப்பு படை வீரர்களை இளைஞர்கள் தாக்கியது வெட்கக்கேடானது. உயர்வான வீரம் என்பது அகிம்சை. இளைஞர்கள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்தாமல் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.”
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்தி நடிகர் அனுபம்கேரும் இதனை கண்டித்து உள்ளார். “இளைஞர்கள் தாக்கியபோது பொறுமையாக இருந்த நமது பாதுகாப்பு படை வீரர்களின் நடவடிக்கையில் அமைதியை அவர் கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. எங்கள் வீரர்களுடன் மல்லுக்கட்ட வேண்டாம் என்று அந்த இளைஞர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.