வெர்பானியா: உலகின் அதிக வயதுடைய பெண்ணாக கருதப்பட்ட எம்மா மொரானோ தன்னுடைய 117-ஆவது வயதில் மறைந்தார்.
இத்தாலி நாட்டில் கடந்த 1899-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி பிறந்தார். இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள வெர்பானியாவில் வசித்து வந்த அவர் நேற்று காலை நாற்காலியில் அமர்ந்தபடியே உயிரிழந்தார்.
அவரது தந்தைக்கு 8 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் எம்மாதான் மூத்தவர். மற்றவர்களை காட்டிலும் எம்மாவே அதிக நாள்கள் உயிருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1800-களில் பிறந்த உலகில் உயிர் வாழ்ந்தவர்களில் கடைசி நபர் இவராவார்.
கடந்த நவம்பர் மாதம் 29-ஆம் தேதி தனது 117-ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவரது முதல் காதலர் முதலாம் உலக போரில் உயிரிழந்தார். அதன் பின்னர் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
எனினும் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட எம்மா, இரண்டாவது உலக போருக்கு முன்னர், அதாவது அவரது மகன் பிறந்தவுடனே இறந்ததன் பின்னர் கணவரை தனியாகவே வாழ்ந்து வந்தார். தனது வாழ்வாதாரத்துக்காக சணல் பைகளை தயாரிக்கும் ஆலைகளிலும், ஹோட்டல்களிலும் ஓய்வு பெறும் வயதைத் தாண்டி உழைத்தார். கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகளை கடந்த பெண்மணியாக போற்றப்பட்டார்.