Loading...
புதிய அரசியல் அரசியல் அமைப்பு வரைவுத் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணிகள் பெரும்பாலும் பூர்த்தியாகியுள்ளது என அரசியல் அமைப்பு உருவாக்கும் குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
Loading...
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஏனைய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பினை உருவாக்கும் போது சர்வஜன வாக்கெடுப்பு குறித்து கவனம் செலுத்துவதா இல்லையா என்பது குறித்து ஆராய்வது தமது பணியல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...