Loading...
இதுவரை நாடாளுமன்றமே அதிக அதிகாரங்களை பெற்றிருந்தது. அதிபர் ஆட்சிமுறைக்காக இப்போது மக்கள் வாக்களித்திருப்பதாக எர்டோஹன் தெரிவித்துள்ளார். தனது கூட்டாளி நாடுகள் உட்பட பலரும் மக்களின் இத்தீர்ப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தீர்மானித்திற்கு ஆதரவாக 25 மில்லியன் வாக்குகள் கிடைத்த நிலையில் எதிராக அதைவிட 1.3 மில்லியன் வாக்குகள் மட்டுமே குறைவாக கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிபரும், எதிர் தரப்பும் எதிர்காலத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று துருக்கியின் நட்பு நாடுகள் கூறியுள்ளன. துருக்கி நேட்டோ முகாமில் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய இஸ்லாமிய நாடாகும் துருக்கி.
இத் தீர்மானத்தின் மூலம் இராணுவம் ஆட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று அதிபர் தெரிவித்தார். “இது ஒரு வரலாற்று முடிவு. நமது ஆட்சி முறையை வாக்குகளின் மூலம் நாம் மாற்றியமைத்துள்ளோம். இதனால்தான் இத்தீர்மானம் சிறப்பு வாய்ந்தது” என்றார் அதிபர் எர்டோஹன். என்றாலும் தலைநகர் இஸ்தான்புல் உள்ளிட்ட சில முக்கிய நகரங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளன. தீர்மானத்தின் முடிவிற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
எனினும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவர 10-12 நாட்கள் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வாக்குகளை எண்ணும் முறையில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளன. பிரதான எதிர்க்கட்சி வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே குறுகிய வாக்குகள் வித்தியாசமேயுள்ளதால் 60 சதவீத வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
Loading...