கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள காணியின் இரண்டு பகுதிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தப் பகுதியில் 100 அறைகளை கொண்ட 2 நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிக்கப்படவுள்ளது.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தனியார் நிறுவனங்களுக்கு இந்த காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் விமான பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பயணிகளின் தங்குமிட வசதிகளை முழுமைப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இடத்தை 40 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கமைய இந்த இரண்டு ஹோட்டல்களையும் நிர்மாணிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் இரண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளன.