Loading...
மீதொடமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களில் 12 ஆண்களும் 14 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களுள் 7 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவ, மீதொடமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 150 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் பலர் புதையுண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...