2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்முலா-1 கார்பந்தயத்தின் 3-வது சுற்று போட்டியில் ஜெர்மனியின் முன்னாள் சாம்பியன் செபஸ்டியன் முதலிடத்தை பெற்றக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஃபோர்முலா-1 கார்பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிற நிலையில், இதன் 3-வது சுற்று போட்டி பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபஸ்டியன் வெட்டல் 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார்.
அவரை விட 6.6 வினாடிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில், இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 2-வது இடத்தையும், பின்லாந்து வீரர் வோல்டெரி போட்டாஸ் 3-வது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
அந்தவகையில், இதுவரை இடம்பெற்த 3 சுற்று போட்டிகளின் முடிவில் வெட்டல் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹெமில்டன் 61 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கிறார்கள். 4-வது சுற்று போட்டி ரஷ்யாவில் எதிர்வருகின்ற 30ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.