தனக்கு அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பண நெருக்கடியால் அக்கா, அண்ணி வேடங்களில் கூட நடிக்க தயாராக இருப்பதாக நடிகை பூமிகா தனக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றார்.
பண நெருக்கடியால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் பத்ரி, ரோஜாக்கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பூமிகா.
பிரபல யோகா நிபுணர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அவர், ஒரு குழந்தைக்கு தாயான பின் நடிப்பதைக் குறைத்து கொண்டார்.
அண்மையில் வெளியாகி வசூலைக் குவித்த எம்.எஸ்.தோனி படத்தில், தோனி கேரக்டருக்கு அக்காவாக நடித்தார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை தனக்கு நெருக்கமான சினிமா வட்டாரத்தில் அவர் தெரிவித்து வருகிறார். பண கஷ்டத்தால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.