மட்டக்களப்பு கிராமங்களில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு அண்ணண், தம்பி,தந்தை கணவன் என்று ஆண் உறவினர்களை அனுப்பி அவர்கள் அனுப்பு பணத்தை செலவழித்துக்கொண்டு தேவையற்ற சமூக கலாச்சார சீரழிவுகள் நடைபெறும் தொடர்ச்சியான எதிரொலி வந்தாறுமூலை பெண்ணிண் மரணம் வெளிப்படுத்துகின்றது.
கணவன் வெளிநாடு சென்று 18 மாதங்கள். தகாத உறவால் மனைவி கற்பமாகி இரத்தப்பெருக்கால் மரணம்.ஏறாவூர் பொலிஸ் பிரிவு வந்தாறுமூலையில் சம்பவம்.
நேற்றைய முன்தினம் 14-04-2017 அன்று மாலை 04.30 மணியளவில் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான “செல்வராசா சுலோஜினி (27) ” என்பவர் மரணமாகிவிட்டதாகவும், பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஏறாவூர் பொலிஸார் மாலை 07.00மணியளவில் ஏறாவூர் பற்று மரண விசாரணை அதிகாரிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்துள்ளனர்.
நீதிபதியின் அனுமதியை பெற்று வாருங்கள், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல வேண்டும் பொலிசாரை எனஅவர் பணித்ததை தொடர்ந்து இரவு 09.00 மணியளவில் நீதிபதி கொரணர்க்கு அளித்த உத்தரவின் பேரில், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பாரப்படுத்துங்கள், நாளை (15-04-2017) மேலதிக விசாரணைகளை ஆரம்பிப்போம் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
15-04-2017 அன்று காலை 08.30 மணிக்கு ஏறாவூர் பொலிஸாருடன் மட்டக்களப்பு வைத்தியசாலை சென்று சடலத்தை பார்வையிட்டதும், மனதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அவருக்கு.
சடலத்தின் உறவினர்கள் காலை 09.30 மணியளவில்தான் வைத்தியசாலைக்கு வந்தனர்.இவர்களது நேரம் பிந்திய வரவும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உறவினர்களான சகோதரன் செல்வராசா கருணேசன், அம்மம்மா இளையதம்பி பூரணம் என்பவரது வாக்குமூலம் பெறப்பட்டபோது …
“இறந்தவருக்கு ஒரு மாதமாக காய்ச்சல் இருந்ததாகவும், மூன்று நாட்களாக காய்ச்சல் அதிகரித்து நேற்றுமாலை மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணித்து விட்டதாக தெரிவித்தனர்.
மரணித்தவரின் கணவர் வெளிநாடு சென்று 18 மாதமாகிறது என்றும் தெரிவித்தனர். இவர்களது முறைப்பாட்டுக்கும், சடலத்தை அவதானித்தற்குமிடையில் வேறுபாடு காணப்பட்டதால் பிரேதபரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, “தடயவியல் பொலிஸாரை வரவழைத்து இறந்தவரின் வீட்டுச்சூழலையும், சடலத்தையும் பார்வையிட்டு அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு ” ஏறாவூர் பொலிஸாரை பணித்ததை தொடர்ந்து.
உடனடியாக தடயவியல் பொலிஸார் இறந்தவரின் ஆலையடி வீதி, வந்தாறுமூலையிலுள்ள வீட்டை பரிசோதனைக்குட்படுத்தி, சடலத்தையும் பார்வையிட்டு அயலவர்களின் வாக்கு மூலங்களும் பெறப்பட்டு முடிவுற்றதும் நேற்று (16-04-2017) காலை பிரேத பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் போது இறந்தவர் வயிற்றினுல் நான்கரை மாதம் மதிக்கத்தக்க குழந்தையொன்று இறந்த நிலையில் காணப்பட்டதோடு, இக்குழந்தை இறந்த பிற்பாடு ஏற்பட்ட வயிற்று வலிக்காக பயண்படுத்திய குளிகைககள் மூலம் அதிக இரத்தப் பெருக்கு வெளியேறி மரணம் சம்பவித்திருக்கலாம் என அவதானிக்க கூடியதாக இருந்தது.
இருந்தாலும் #மரணத்துக்கான #காரணத்தை கண்டறிய “இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.உறவினர்களிடம் மேலதிக விசாரணைகளை தொடர்ந்த போது, இவர் தவறான முறையில் கற்பமுற்றதால் யாரிடமும் சொல்லாமல் மறைக்கவே இவ்வாறான #முறைப்பாடுகளை மறைத்துள்ளதாக தெரியவந்தது..
யார் அந்த சூத்திரதாரி??? பொலிஸார் மேலதிக விசாரணையில்.