கிழக்கு லண்டனில் நடத்தப்பட்ட அமிலத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கிழக்கு லண்டனின் டல்ஸ்டன் (Dalston) எனும் பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.10 மணியளவில் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இத் தாக்குதலைத் தொடர்ந்து Mangle E8 எனும் விடுதியில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சிகிச்சையின் பொருட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த லண்டன் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் “குறித்த இரவு விடுதியினுள் அமில வகையொன்று வீசியெறியப்பட்டது. வீசியெறியப்பட்ட அத் திரவம் அதிகூடிய அமிலத் தன்மை வாய்ந்தது என பி.எச் தாளின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.