Loading...
இலஞ்ச ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லி பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்கு தினகரன் பெங்களூர் செல்லவுள்ளதால், டெல்லி பொலிஸாரின் ஒரு குழு பெங்களூருக்கும், மற்றொரு குழு சென்னைக்கும் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லியில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...