அனைவருக்கும் தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அனைவரும் அதற்கு ஏற்ப நடந்துக் கொள்கிறார்களா? என்பது தான் பெரிய கேள்வி.
அழகாக இருந்தால் ஃபேஸ்புக்கில் ஆயிரம் லைக் வாங்கிட முடியுமா என்ன? அதுவே நீங்கள் நல்லது செய்பவர் என அறிந்தால் நீங்கள் கருப்பா, சிவப்பா, சிக்ஸ் பேக்கா? குண்டா? என எதையும் பாராமல் மனதார ஆயிரம் லைக் என்ன? லட்சம் லைக்ஸ் கூட போடுவார்கள். அது தான் வாழ்க்கை.
அந்த வகையில் நீங்கள் வாழ்க்கையில் முறையாக கடைப்பிடிக்க வேண்டிய மூன்று செயல்கள்…
1 அத்தியாவசியமான மூன்று:- நேர்மை; தூய்மை; உண்மை
2 பாராட்டப்பட வேண்டிய மூன்று:- அறிவு; அழகு; இன்னிசை
3 விருத்தி செய்யப்படவேண்டிய மூன்று:- சுறுசுறுப்பு; அனுதாபம்; தன்னிறைவு
4 மரியாதை செய்யப்பட வேண்டியவ் மூன்று:- முதுமை; சமயம்; சட்டம்
5 முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய மூன்று:- காலம், ஆரோக்கியம்; செல்வம்
6 அடக்கி ஆள வேண்டிய மூன்று:- நா; கோபம்; செய்கை
7 தவிர்க்கப்பட வேண்டிய மூன்று:- சோம்பல்; பொய்; வசை
8 உயர்விக்கப்பட வேண்டிய மூன்று:- சத்தியம்; கடவுள்; அழகு
இவை அனைத்தையும் கடைப்பிடித்தாலே போதும் நம் வாழ்வில் துன்பங்கள் நீங்கி நல்ல வளமுடன் வாழ முடியும்.