Loading...
நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் இடம்பெற்ற கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்ற துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த தொலைபேசி உரையாடலின் போது இம்மாதம் 7ஆம் திகதி சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எர்டோகன் பாராட்டு தெரிவித்தமைக்கும் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
Loading...
துருக்கியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்துக்கணிப்பில் சுமார் 25 மில்லியன் மக்கள் ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வாக்களித்தனர்.
இருப்பினும் இந்த கருத்துக்கணிப்பின் போது சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருவதோடு, அதனை எர்டோகன் முற்றாக மறுத்துள்ளார்.
Loading...