Loading...
கொழும்பு நகர சபையால் சேமிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலை கரதியான பகுதியில் கொட்டுவதற்கு கொழும்பு மாநகரசபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததை அடுத்து, கொழும்பு மாநகரசபை நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த உத்தரவை கஸ்பேவ நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
Loading...
இதற்கமைய, கொழும்பில் நாள் ஒன்றுக்கு சேரும் 350 மெட்ரிக் தொன் குப்பைகளை பெற்றுக்கொள்ளுமாறு கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நடைமுறை நேற்று (திங்கட்கிழமை) மாலை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
Loading...