மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். கட்டிட தொழலாளி. இவரது மனைவி நாகஜோதி(27). அய்யனாரின் அக்கா சித்திரைக்கனி. இவர் கணவர் பிரிந்து சென்றதால் மகன் அஜித்துடன்(22) அய்யனார் வீட்டில் வசித்து வந்தார்.
அஜித் திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நாகஜோதிக்கும், அஜித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.
இவர்களது கள்ளத்தொடர்பு அய்யனாருக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அய்யனார், சித்திரைக்கனியையும், அஜித்தையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இதற்கிடையே பக்கத்து ஊரில் நடந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக அய்யனார் சென்றுவிட்டார். அப்போது அஜித் வீட்டிற்கு வந்து நாகஜோதி சந்தித்திருக்கிறார். இருவரும் வெகு நேரமாக பேசியிருக்கிறார்கள்.
பின்னர் இருவம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி வீட்டிலேயே நாகஜோதியும், அஜித்தும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அய்யனார் வீட்டிற்கு விரைந்து வந்தார். தற்கொலை செய்து கொண்ட 2 மணி நேரத்தில் இருவரது உடல்களையும் மயானத்தில் எரித்துவிட்டனர்.
போலீசுக்கு தெரியாமல் உடல்கள் எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அய்யனார், அவரது அண்ணன் தெய்வம், அக்காள் சித்திரைக்கனி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.