நடிகர் அஜித்தின் நற்பண்புகளை பற்றி பலர் பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறோம். அந்த வகையில் ஒரு பிரபல மாத இதழ் ஒன்றில் அஜித் செய்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பதிவு செய்துள்ளனர். அதாவது சமீபத்தில் தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்துஇருக்கிறார் அஜித். மறுமுனையில் சுரேஷுக்கு பதில் எடுத்து வேறு ஒருத்தர், சுரேஷ் மாமனார் இறந்துவிட்டார் தொலைப்பேசியை சார்ஜ் போட்டு சென்று இருக்கிறார் என்று அந்த நபர் கூறினார்.
உடனே முகவரி வாங்கி கொண்டு அஜித் அந்த ராத்திரியில் புறநகர்ப்பகுதிக்கு சென்றார். ஓரிடத்தில் கேனில் டீ விற்று கொண்டிருந்த இளைஞரிடம் அஜித் வழி கேட்டு இருக்கிறார், அஜித்தை பார்த்து அதிர்ச்சி இருந்தும் அந்த இளைஞர் சரியான வழியை கூறினார். துக்க வீட்டுக்கு சென்று திரும்புகையில் அங்கு இருக்கும் ஒருவரை தனது காரை பின்தொடர கூறியிருக்கிறார்.
பின் மறுபடியும் போற வழியில் பார்த்த அதே டீ விற்ற இளைஞரிடம் சென்றார் அஜித் . அந்த இளைஞரிடம் ஒரு தொகையை கொடுத்து தனது காரிலே கூட்டிட்டு போய் துக்க வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் டீ கொடுக்க சொல்லிருக்கிறார். மேலும் தன்னை பின்தொடர சொன்ன நபரிடம் இந்த இளைஞரை அவன் சொல்லும் இடத்தில இறக்கி விடுங்கள் என்று கூறி விட்டு சென்று இருக்கிறார் அஜித்.