எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு ‘பாகுபலி-2’ பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் தணிக்கை குழுவினர் ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2 மணி 45 நிமிடங்கள் வரை படத்தின் நீளம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படத்தை உலகம் முழுவதிலும் 7000-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுவதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.