சுவாதி படுகொலையின் போது குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் முதலில் ஈடுபட்டது ரெயில்வே காவல்துறை அதிகாரி பாஸ்கரன்.
தனது புலனாய்வில், “சுவாதிக்கு காதலன் இருப்பதாகவும் 2 வருடங்களாக அவர்கள் தொடர்பில் இருப்பது இரு குடும்பத்தினருக்கும் தெரியும்” என்று பத்திரிகையாளரிடம் பேட்டியில் குறிப்பிட்டுள்ள காணொளி [இதற்கு மாறான ஒருதலைக் காதல் கதையை உருவாக்கிய டி.கே.ராஜேந்திரன் பேசிய காட்சியும்] இப்பதிவுடன் உள்ளது.
சுவாதி படுகொலையில் ஆர்எஸ்எஸ் / பாஜகவினருக்கு தொடர்பு உள்ளதை இணைய பொது ஊடகங்களால் ஆதாரத்தோடு விவாதிக்க ஆரம்பித்த போது சுதாரித்துக் கொண்ட பாஜக / ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள்…..
தங்கள் அமைப்பைச் சேர்ந்த சுவாதியின் அப்பா என்று அடையாளப் படுத்தப்பட்டவரையும், சுவாதியின் சித்தப்பாவையும், தங்கள் அமைப்பைச் சேர்ந்த கூலிக்கூட்டத்தையும் தப்புவிப்பதற்காக ரெயில்வே காவல்துறையிடம் இருந்து வழக்கை டி.கே.ராஜேந்திரனுக்கு கைமாற்றியது.
இதில் தான் ஒருதலைக் காதல் கதையை காவி எடுபிடி டி.கே.ராஜேந்திரன் உருவாக்கினார்…
“சுவாதி காதலிக்க மறுத்ததால் ராம்குமார் கொன்றார்” என்று அந்த அப்பாவியை குற்றவாளியாக்கியதோடு, அப்போதைக்கு அவனுடைய கழுத்தை அறுத்து பேசவிடாமல் செய்தார்.
இதற்கு பிறகு பல சம்பவங்கள் நடந்தேறின. தொடர்ந்து நான் பல தகவல்களை பொதுவெளியில் பதிவிட்டதோடு, ராம்குமாரின் வழக்கறிஞருக்கு மாறாக வேறு இரு வழக்கறிஞர்கள் ராம்குமாருக்காக வழக்காடப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் சிறைக்குள்ளேயே ராம்குமாரை சாகடித்ததும் இதே உளவுத்துறை காவி எடுபிடி டி.கே.ராஜேந்திரன்தான்.
ராம்குமார் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது நாளில் இந்த காவி எடுபிடியிடம் விவாதத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை மற்றொரு முறை பார்ப்போம்…
“ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் இருந்த 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன.”
இந்த குற்றச்சாட்டை முதன்முறையாக 5 மார்ச் 2017 இல் அதிமுகவின் அமைச்சர் பொன்னையன் பகிரங்கமாக அறிவித்தார்.
அதேப்போல்,”போயஸ் தோட்டத்தில் இருந்து அப்பலோவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆம்புலன்ஸ் அனுப்புங்கள் என்று சொன்ன டிஎஸ்பி யார்?” என்று 2 மார்ச் 2017 இல் பி.எச்.பாண்டியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
இந்த இரண்டு வேளைகளைச் செய்ததும் இதே காவி அடியாள் டி.கே.ராஜேந்திரன்தான்.
இத்தனை பயங்கர சட்ட விரோத வேளைகளைச் செய்துவிட்டு இந்த மனுசன் காவி சட்டையை மாட்டிக் கொண்டு எப்படி விரைப்பாய் திரிகிறது?
மாபீயா ரவுடி என்றால் சட்டத்திற்கும், காவல்துறைக்கும் பயந்து சாக வேண்டி இருக்கும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் / பாஜக அரசியல் அதிகாரங்கள் தனக்கு பலம் என்று டி.கே.ராஜேந்திரன் நினைப்பாரானால்…
அரசியல் அதிகார வர்க்கங்கள் எடுபிடிகளை எப்படி பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் தேவைப்பட்டால் பாடை கட்டவும் தயங்காது என்பதை விரைவில் டி.கே.ராஜேந்திரன் உணரக்கூடும்.