இயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் குறிப்பாக ஒருசில பழங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
தேவையான பொருட்கள்
- ஸ்ட்ராபெர்ரி – 5
- ஆரஞ்சு – 2
- சியா விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை துருவிக் கொண்டு அதில் 2 ஆரஞ்சு பழத்தின் சாற்றினை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்
அதன் பின் நீரில் 15 நிமிடம் ஊற வைத்த சியா விதைகளை, ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் சேர்த்துக் கலந்தால், ஜூஸ் தயார்.
நன்மைகள்
இந்த ஜூஸைக் குடிப்பதால், உயர் ரத்த அழுத்த, இதய நோய்கள், தலைவலி, உடல் வலி போன்ற பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபட உதவுகிறது.
அதிலும் முக்கியமாக இந்த ஜூஸை தினமும் குடித்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
குறிப்பு
இந்த ஜூஸை தினமும் 1/2 டம்ளர் குடித்து வந்தாலே போதுமானது.