சரத்குமார், சேரன், பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சென்னை ஒருநாள்’. இப்படத்தை சாஹித் காதர் என்பவர் இயக்கியிருந்தார். மலையாளத்தில் வெளிவந்த ‘டிராபிக்’ என்ற படமே தமிழில் ‘சென்னையில் ஒருநாள்’ என்ற படமாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ‘சென்னையில் ஒருநாள்’ படத்தைப் போன்று பரபரப்பான திரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய திரில்லர் கதையை தழுவு இப்படம் எடுக்கப்படுகிறது. ராஜேஷ்குமாரின் கதையை மையமாக வைத்த எடுக்கப்பட்ட ‘குற்றம் 23’ படம் அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெ.பி.ஆர். இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா பிரேம், ராஜசிம்ஹான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் சரத்குமார் புலன் விசாரணை அதிகாரியாக வருகிறாராம். இவர் விசாரணை செய்யும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்குமாம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்தது. படப்பிடிப்பும் கோவையிலேயே தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு படமாக்க இருக்கின்றனர்.