மயிலம்பாவெளியில் காதலியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியாமையினால் விரக்தியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை! என்ன நடக்குது? மட்டக்களப்பு மாவட்டத்தில்.!!???
2017 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ள தற்கொலை மரணங்கள். இன்று காலையிலும் மைலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தில் 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை.
யுத்த காலத்திலேயும் இப்பகுதியில் இவ்வளவு அதிகரித்த மரணங்கள்.
நிகழ்ந்ததில்லை.இதனுடன் இவ் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச தமிழ்கிராமங்களில் 20வது தற்கொலையாகும் இந்த வருட தொடக்கத்திலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் நடைபெற்றுள்ளது. அதிலும் விசேடமாக தூக்கு போட்டு தற்கொலை செய்தல் முறையை கையாளுகின்றனர் இக்கிராமங்களில்.
மயிலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தை சேர்ந்த “யோகதிராவிடகுமார் யோகேட்குமார் “என்ற இளைஞனே தனது வீட்டு வளையில் சீலையொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் ஏறாவூர் பற்று மரண விசாரணை அதிகாரி சகிதம் விசாரனைகளை முன்னெடுத்து பிரேதம் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நேற்று (18-04-2017) காலை தனது சகோதரி வீட்டில் காலை சாப்பாடு சாப்பிட்டு, சகோதரியின் குழந்தைகளோடு விளையாடிவிட்டு 11.30 மணியளவில் வெளியாகிச் சென்ற இவரை இரவு 11.00 மணியாகியும் காணக்கிடைக்கவில்லை.
அதற்கிடையில் இவரது உறவினர்கள், நண்பர்கள் தொலைபேசி அழைப்புகள் எடுத்தபோதும் பதிலளிக்காததால், சந்தேகம் ஏற்பட நண்பர்கள், உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளளனர்.
முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த நண்பரிடத்தில்தான் இவர் தற்கொலை செய்யயப்போவதாக ஏற்கனவே கூறியிருந்ததால், அந்த நண்பரின் தொலைபேசி அழைப்புக்கும் பதில் வராததால் அவருடைய தம்பியை இரவு 09.00 மணிபோல் அனுப்பி பார்த்துவர சொல்லியிருக்கிறார்.
அதேவேளை யோகேட்குமாரின் தாயாரும் மகளுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, குமாரின் தொலைபேசி வேலை செய்கிறது, பேசுகிறானில்லை.வீட்டுக்கு போய் பார் என்று சொன்னதும்,
குமார் தங்கிவந்த வீட்டுக்கு சென்றபோது பூட்டப்பட்ட அறையினுள் தொலைபேசி அழைப்பு சத்தம் கேட்டதும் கதவை தட்டிப்பார்த்திருக்கிறார்கள்
திறக்கப்படாததால் யன்னலை உடைத்து பார்த்தபோது ” அறை வளையில் சீலையினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்குவதை அவதானித்துள்ளனர்.