வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.
இடம், பூமியால் லாபம் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். அலுவலக பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
குருவை வழிபட்டு குதூகலம் காண வேண்டிய நாள். குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். உங்களுக்கு பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆரோக்கியத்திற்காக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.
பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். நண்பர்கள் உங்கள் பணிகளுக்கு கை கொடுத்துதவ முன்வருவர். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வரவு திருப்தி தரும்.
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவு திருப்தி தரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பராமரிப்புச் செலவு உண்டு.
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் திருப்தி தரும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும்.
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம், இலாகா மாற்றங்கள் உண்டு.
இனிமையான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். அந்நிய தேசப் பயண வாய்ப்புகள் எண்ணியபடியே கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.