Loading...
அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இன்னும் இரண்டு வார காலத்தில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
Loading...
இதன்போது பல புதிய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...