முதல்வர் பதவி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட சில முக்கிய விடங்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நாளை (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
அ.தி.மு.க கட்சியிலிருந்து பிரிந்த இரு அணிகளையும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையில், முதல்வராக ஓ.பி.எஸ்ஸூம், துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமியும் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவி குறித்தும் நாளை முடிவு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.