மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு தொடர்பில் ஆராயும் வகையில் ஜப்பானிலிருந்து விசேட தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யும் குறித்த குழுவினர், அனர்த்தம் தொடர்பில் அறிவியல் சார்ந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமரின் உத்தரவின் பேரில் மேற்படி குழுவினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை இலங்கைக்கான ஜப்பான் தூதுவரால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தினால், கூடாரங்கள், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், மின் விளக்குகள், நச்சுவாயு உணர்கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.