சக தோழிகளுடன் கடற்கரையில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது கடலலை இழுத்துச் சென்றதில், நீரில் மூழ்கி 11 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது உயிரிழந்தவர் நுகேகொட, கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த ருஸ்தி தருமினி ஜயசிங்க என்ற 11 வயது மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் வீட்டிற்கு சென்ற குறித்த மாணவி, அங்குள்ள தனது 6 சக நண்பிகளுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு கடற்கரையில் உள்ள கடற்பாறையின் மீது நின்று செல்பி எடுத்துள்ளனர். இதன் போது அங்கு திடீரென வந்த பெரிய அலை இவர்களை இழுத்து சென்றுள்ளது.
இதன் போது அவருடன் சென்ற சக தோழிகள் 6 பேர் சிறுகாயங்களுடன் தப்பிக் கரைசேர்ந்தபோதும் குறித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேலும், சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் உயிரிழந்த மாணவியின் பிறந்த தினம் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.