தமிழகத்தில் தொடர்ந்து நேற்றும் வெயில் வாட்டி வதைத்தது. சென்னை, தருமபுரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நெல்லை, புதுச்சேரி, சேலம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய நகரங்களில் 40 டிகிரியை தாண்டி வெப்பம் சுட்டெரித்தது.
தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என்பதால் பகலில் தேவையின்றி வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பத்தின் அளவு அதிகரிக்கலாம் என்பதாலும், அனல் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் பள்ளிகளில் வெளியே வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு முடிந்த மறு தினமே வெப்பம் அதிகரித்து விட்டது, கடந்த மாதம் முதல் தெருக்கடை பதநீர், இளநீர், பழக்கடைகள் அதிகரித்து விட்டது.
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 இலட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது.
மேலும், 2017இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது.
இது பற்றிய ஆய்வை கூட செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளோம், விளைவுகளை கணிக்க முடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என வெப்ப நிலை குறித்து உலக வானிலை எச்சரித்துள்ளது.
அண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எல்நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தன.
இலங்கையைப் பொறுத்த மட்டில் மழை வெப்பம் என்று வருகின்ற போது தமிழகத்தில் தாக்கம் வருகின்ற போது இலங்கையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துவது வழமை.
குறிப்பாக வடகிழக்கில் அதன் தாக்கம் எப்போதும் இருக்கும். தமிழ் நாட்டின் தற்போதைய வெப்பம் வடகிழக்கில் அதிகரிக்கும் இலங்கையின் வடகிழக்கில் அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து வடமாகாணம் தலைமன்னார் வரை மிகவும் அதிகமான வெப்பம் ஏற்பட்டுள்ளன.
இளநீர் 110 ரூபாய்க்கு விற்பனை நடக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்த ஊர்களில் 120 ரூபாவுக்கு விற்பனை செய்த கதையும் உள்ளது. எரிகின்ற வீட்டில் பிடுங்கிய கதை போன்று கொள்ளை இலாபம் ஈட்டிய ஈனச்செயலும் உள்ளது.
விசேடமாக திருகோணமலை மாவட்டத்தில் மிக அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் நேற்று மூடு பனி காலை 9மணி வரையும் இருந்தது.
நுவரலியா போன்று. ஆனால் இன்று மூடு பனி இல்லை. இப்படியாக மாறுபட்ட காலநிலை அடிக்கடி மாறி வருகின்றது. இந்த அதிகரித்த வெப்பம் என்பது ஜூன் மாதம் வரை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
இதேநேரம் மே மாதம் இறுதி வரை இந்த அதிகரித்த வெப்பம் இருக்குமென்று இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது .