உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மூன்றாம் உகப்போர் நிச்சயமாக நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என உலக நிகழ்வுகளை முன்கூட்டிய கணிக்கும் பாபா வாங்கா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வாங்கா என்ற மூதாட்டி தான் இதனைக் கணித்து கூறியுள்ளார். இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார்.
ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.
எனினும், பாபா வாங்கா கணித்து கூறும் ஒவ்வொரு நிகழ்வும் சரியாக நடந்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு பாபா வாங்கா உயிரிழந்தபோது அவருக்கு வயது 85 ஆகும். ஆனால், அதற்கு முன்னதாக பல விடயங்களை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். இத்தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.
அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என பாபா வாங்கா கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பின்னர், 2016-ம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார்.
இது மட்டுமில்லாமல், தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என பாபா வாங்கா கணித்தார்.
இதுவும் தற்போது உண்மையாகவே நிகழ்ந்துள்ளது.
இறுதியாக, 2017-ம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் பகைமை அதிகரித்து வருவதால் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா? என்ற அச்சமும் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.