உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அந்த வகையில் உள்ள சில அற்புதமான பழங்கள் இதோ!
கிவி
கிவி பழம் சுவையான பழங்களின் ஒன்றாகும். இந்த கிவி பழத்தில் விட்டமின் C அதிகமாக நிறைந்துள்ளதால், இது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
ஆலிவ்
பல்வேறு நிறங்களில் உள்ள ஆலிவ் பழத்தில் கருப்பு மற்றும் பச்சை நிறமுள்ள ஆலிவ்கள் தான் மிகவும் சிறந்தது. இவைகளை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடைவதுடன், புற்றுநோய்கள் தடுக்கிறது.
டிராகன் பழம்
டிராகன் பழம் தென் ஆசியாவில் உள்ளது. தித்திக்கும் சுவையைக் கொண்ட இந்த பழமானது, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ரம்புத்தான் பழம்
ரம்புத்தான் பழம் தெற்காசியாவை தாயகமாக கொண்டது. இந்த பழத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இது நீரிழிவு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
பேசன் பழம்
பிரேசிலை தாயகமாக கொண்ட இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த மென்மையான தசைப்பகுதியைக் கொண்டது. இது புற்றுநோய் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை குணமாக்குவதில் மிகவும் சிறந்தது.
மங்குஸ்தான் பழம்
ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் இந்த மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. மேலும் இது வயிற்றுப் போக்கிற்கு உடனடித் தீர்வளிக்கிறது.