உலகம் தொழில்நட்ப ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் என்ன தான் முன்னேறி கொண்டிருந்தாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சைகுரிய சம்பரதாயங்கள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன.
விலங்குகளை கூட்டாக கொல்வது – நேபாளம்
நேபாளத்தில் Gadhimai என்னும் பண்டிகை கொண்டாடபடுகிறது. சமீபத்தில் நடந்த இந்த பண்டிகையின் போது ஒரே நேரத்தில் 5000 எருமைகள் கொல்லப்பட்டன.
இப்படி கொல்வதால் இந்து கடவுளான Gadhimai மகிழ்வார் என நம்ப படுகிறது.
இறந்தவர்களின் சாம்பலை சாப்பிடுவது – பிரேசில்
பிரேசிலில் வாழும் ஒரு இன மக்கள் தங்கள் உறவினர்கள் இறந்தால் அவர்களை எரித்து அந்த சாம்பலை சாப்பிடுகிறார்கள்.
இறந்தவர்கள் எந்த வகையிலும் பூமியில் இருக்க கூடாது என சாம்பலை அவர்கள் சாப்பிடுகிறார்கள்.
விரலை வெட்டி கொள்வது – இந்தோனேசியா
இந்தோனேசியாவில் வாழும் பழங்குடி மக்களின் குடும்பத்தில் யாராவது மரணத்தால் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் விரலை வெட்டி விடுவார்கள்.
இறந்தவர்களுக்கு துக்கம் செலுத்த இந்த முறை பின்பற்றப்படுகிறது.
பற்களை சுத்தியால் கூராக்குவது – இந்தோனேசியா
இந்தோனேசியாவில் வாழும் ஒரு பழங்குடி மக்கள் கூட்டத்தில் இருக்கும் இளம் பெண்களின் பற்கள் சுத்தி மற்றும் ஊசிகள் கொண்டு கூராக்கபடுகிறது.
இப்படி செய்தால் அவர்கள் அழகு கூடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
எச்சில் துப்புதல் – ஆப்பிரிக்கா
ஆப்பிக்கா காடுகளில் வாழும் ஒரு பகுதி மக்கள் தங்களை சந்திக்க வரும் நண்பர்களின் கையில் முதலில் எச்சில் துப்புவார்கள். பின்னர் தான் அவர்களுடன் கை குலுக்குவார்கள்.
பெண்களை கடத்தி திருமணம் – ரோமனிய மக்கள்
ஐரோப்பியாவில் வாழும் ரோமானிய மக்கள் கூட்டத்தில் உள்ள ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை கடத்தி 3 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.
அப்படி செய்தால் அந்த பெண்ணை திருமணம் செய்ய கடத்திய ஆண்களுக்கு உரிமை உண்டு.
தீ மிதிக்கும் கணவன் மற்றும் மனைவி – சீனா
சீனாவில் ஒரு பகுதியில், கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு வலி இல்லாமல் பிரசவம் நடக்க, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொளுத்தப்பட்ட கரித்துண்டுகளில் நடக்கிறார்கள்.
கால்களை பிணைப்பது – சீனா
4 அல்லது 5 வயதான சிறுமிகளின் கால்கள் சீனாவில் பிணைக்கபடுகிறது. இதை செய்த பின்னர் கால்கள் வளராது. அவர்களால் நடக்கவோ, ஓடவோ முடியாது.
வளராத சிறிய கால்கள் சீனாவில் அழகு மற்றும் உணர்ச்சி பிம்பமாக பார்க்கபடுகிறது.
கழுத்தில் பெரிய வளையம் அணிவது – தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா
பெண்கள் அழகாக இருக்க அவர்கள் கழுத்தில் நீளமான பித்தளையால் ஆன வளையம் கழுத்து முழுவதும் அணிவிக்கப்படுகிறது. இது தோள்களை சிதைக்கவும் செய்கின்றன.