பிரஞ்சு பில்லியர்ட்ஸ் வீரர் ஒருவர் உலகின் நீளமான பில்லியர்ட்ஸ் குச்சியை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். “வெனாம் டிரிக்ஷாட்ஸ்” என்ற அமைப்பில் உள்ள 28 வயதான கோஹ்லர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். 17 அடி உயரமும், 7.4 அங்குல நீளமும் உடைய பில்லயர்ட்ஸ் கோற்பந்து எனப்படும் நீள குச்சியை அவர் உருவாக்கி இருக்கிறார்.
இதையடுத்து, லாஸ் வேகாசை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் கின்னஸ் அமைப்பு இதனை உலக சாதனையாக அறிவித்துள்ளது. கோஹ்லர் பில்லியர்ட்சில் கைதேர்ந்தவர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ளார். பலவிதமாக, பில்லியர்ட்ஸ்களை கோற்பந்து மூலம் சரியான இலக்கில் செலுத்தும் திறமை உடையவர்.
வித்தியாசமான திறமை கொண்ட இவரது தற்போதைய முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து கோஹ்லர் தெரிவித்த போது,
இந்த நீளமான குச்சியை செய்துமுடிப்பதற்கு முன், நான் இதனை செய்வேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. மேலும் தன்னுடைய இந்த முயற்சி புதுமையானது. இதற்குமுன்னர் இதுபோன்ற நீளமான குச்சியில் பில்லியர்ட்ஸ் விளையாடாததால் இது ஒரு சவால் நிறைந்த அனுபவமாக இருந்தது. மிகவும் பிடித்திருந்தது.
என்று கூறினார்.