தமிழ்த்தேசத்தின் இருப்பிற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வியே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இளைஞர் திறன்விருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை மணடபத்தில் இன்று நடைபெற்ற கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துக் கொண்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறித்த நிகழ்வு, கனடா வாழ் தேவராஜ் குடும்பம், நிறோலேணர்ஸ் ஆகியோர்களினதும் இன்னும் சில சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
பிள்ளைகளின் கல்வியிலே அதிக அக்கறை கொண்டு இந்த மண்ணிலே வாழ்கின்ற பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கையின் அடிப்படையில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்திருப்பது ஒரு பல்வேறுபட்ட பரிமாணங்களில் நல்லதொரு அத்தியாயமாக நான் கருதுகிறேன்.
உலகத்திலே எந்தவொரு நாடு அபிவிருத்தி அடையவேண்டுமானாலும் எந்த இனமும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் கல்வி முக்கியமானது.
கல்லியைப்பெறமுடியாத சமூகம் இந்தப்பூமிப்பந்திலே சரியான அடையாளத்தைப்பெற முடியாது.
நூங்கள் நல்ல மனிதர்களாக எங்களுடைய தேசியத்தை நேசிப்பவர்களாக தமிழர்களாக இந்த மண்ணிலே வாழவேண்டும் என்றால் அதற்கு முதகெலம்பாக இருப்பது கல்வி அதை உணர்ந்தமையால்த்தான் புலம் பெயர் உறவுகளும் இங்குள்ள வசதிபடைத்தவர்களும் இவ்வாறான பணிகளைச் செய்கிறார்கள்.
இந்த நிகழ்வு இளைஞர்திறன் விருத்தி அமையத்தின் தலைவர் சுரேன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் ஜெயராணி, பச்சிலைப்பள்ளி பிரதேசவைத்திய அதிகாரி சுகந்தன், எனப்பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.