தற்போது துரித உணவுகளை சாப்பிடுவது அதிகமாகிவிட்டது. அதிலும் நகரத்தில் பணிபுரிவோர்க்கும் துரித உணவு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்து கொள்வதால் உடல்நல கோளாறுகளை அதிகம் சந்திக்கவேண்டியுள்ளது.
இதனை தவிர்ப்பதற்காக சில ஆரோக்கிய உணவுகளை நாம் எடுத்து கொள்ளவேண்டும்.
க்ரீன் டீ
க்ரீன் டீ உணவு பொருள்களின் மீதான நாட்டத்தினை தடுத்து, துரித உணவுகளால் செல்களில் ஏற்படும் பாதிப்பினை குறைக்கும்.
முட்டை மற்றும் வெஜ் ஆம்லெட்
முட்டை மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஆம்லெட்டினை சாப்பிடும்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மதுவால் உடல் ஆரோக்கியம் பாழாவதை தடுக்கும்.
தயிர் மற்றும் பெர்ரி பழங்கள்
தயிரில் பெர்ரிப்பழங்களை துண்டாக்கி துரித உணவுகளை உண்டப்பின் சாப்பிட்டால் குடல் அழற்சி மற்றும் காயங்கள் ஏற்படுவதை தடுத்து செரிமான கோளாறுகளை குறைக்கும்.
தண்ணீர்
துரித உணவுகளை உட்கொண்ட பின் அதிகளவு நீரை பருகவேண்டும். இதனால் உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதோடு வயிறு உப்புச பிரச்சனையும் தடுக்கப்படும்.
புதினா அல்லது இஞ்சி டீ
இஞ்சி அல்லது புதினா டீ யினை குடித்தால் செரிமான பாதைகள் சுத்தமாகி வயிற்று பிடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
ஓட்ஸ் மற்றும் பழங்கள்
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஒட்டு மொத்த உடலையும் சுத்தப்படுத்தி செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள்
அதிக நீர்ச்சத்தினை உடைய பழங்களான தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றினை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்களை கிடைக்க செய்து உடலை ஆரோக்கியமாக இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள கனிமச்சத்துக்கள் துரித உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்கும்.