கனடா நாட்டில் தந்தையின் அஜாக்கிரதை காரணமாக 11 வயது மகன் அவனுது சகோதரனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள மனிடோபா நகருக்கு அருகில் உள்ள Garden Hill First Nation என்ற மலைப்பகுதி அமைந்துள்ளது.
சுமார் 5,000 மக்கள் வசிக்கும் இப்பகுதியில் தம்பதி இருவர் தங்களுடைய 11 மற்றும் 12 வயது மகன்களுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு நேரத்தில் சகோதர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, 12 வயது சகோதரனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. துப்பாக்கியை எடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றிக்கொண்டு விளையாடியுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு துப்பாக்கி 12 வயது சகோதரனின் கையில் கிடைத்தபோது விளையாட்டாக டிரக்கரை அழுத்தியுள்ளான்.
துரதிஷ்டவசமாக துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட குண்டு 11 வயது சகோதரனின் தலையை துளைத்துள்ளது.
இச்சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சகோதரன் துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு வெளியே வந்த பெற்றோர் தங்களுடைய மகன் உயிரிழந்து கிடப்பதைக் அலறி துடித்துள்ளனர்.
அப்போது, அஜாக்கிரதையாக குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியை வெளியே விட்டுச்சென்றது தந்தைக்கு புரிந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 12 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி வைத்துள்ள பெற்றோர்கள் அதனை மிகவும் பத்திரமாகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு பொதுமக்களுக்கு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.