Loading...
ஒவ்வொரு காலத்திலும் நமது உடலில் மாற்றங்கள் ஏற்படும். உடல் வளர்ச்சி அடையும். ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு பின் அந்த வளர்ச்சியானது நின்றுவிடும்.
செல் வளர்ச்சி மெதுவாக குறைய ஆரம்பிக்கும். எலும்புகளில் கால்சியம் சேருவது குறையும்.
Loading...
அஜீரணம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் நாம் கட்டாயம் சரியான உணவு முறையினை பின்பற்ற வேண்டும்.
கட்டாயம் செய்ய வேண்டியவை
- அதிகப்படியான காபியினை அருந்தக்கூடாது. இது உடலுக்கு ஆற்றலை கொடுத்தாலும் எலும்புகளை மேலும் பலவீனமாக்கும். செல் வளர்ச்சியினை மேலும் முறைய செய்யும்.
- 30 வயதிற்கு பின்னர் வாழைப்பழத்தினை அதிகமாக சாப்பிடவேண்டும். இதில் உள்ள நார்சத்தானது செல் உற்பத்தியினை அதிகரித்து இதயநோய் வராமல் தடுக்கும்.
- அதிகளவில் கீரையினை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் உள்ள போலிக் ஆசிட் மற்றும் கால்சியமானது எலும்புகளின் வளார்ச்சிக்கு மிக அவசியம்.
- தயிர், மோர், பால் போன்றவற்றினை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும். இதன் மூலம் உடல் உஷ்ணத்தினை குறைக்கலாம். மேலும் கால்சியமானது அதிகரிக்கும்.
- முக்கியமாக 30 வயதிற்கு பின் உணவுகளை கட்டாயம் தவிர்க்கக்கூடாது. இது வளர்சிதை மாற்றத்தினை குறைக்கும். அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
- தேங்காய், அவகேடோ மற்றும் நல்லெண்ணெயினை உபயோகப்படுத்துவதால் மூட்டு தேய்மானம், மூட்டு வலியினை தவிர்க்கலாம்.
Loading...