அர்ஜெர்டினா நாட்டில் கோமா நிலையில் இருந்த போது குழந்தையை பிரசவித்த பெண் தற்போது நினைவு திரும்பி 4 மாதங்களுக்கு பின் தன் குழந்தையை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.
அர்ஜென்டினாவை சேர்ந்தவர் அமேலியா பேனன் (34). காவல் துறை ஆக பணிபுரிந்தார். இவரது கணவரும் காவல் துறை அதிகாரி ஆவார்.
கடந்த ஆண்டு (2016) இவர் தனது கணவர் மற்றும் சக காவல் துறையினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் விபத்துக்குள்ளானது.
அப்போது அமேலியா பேனன் கர்ப்பமாக இருந்தார். படுகாயம், அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவர் ‘கோமா’ நிலைக்கு சென்றார்.
இருந்தும் அவருக்கு தனியாக ஒரு நர்சு பணி அமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கோமா நிலையில் இருந்த அமேலியாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு சான்டினோ என பெயரிட்டனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அமேலியாவுக்கு சமீபத்தில் ‘கோமா’ தெளிந்தது. மயக்க நிலையில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு வந்தார்.
இவருக்கு பழைய நினைவுகள் வந்தன. பின்னர் தான் பெற்ற குழந்தையை 4 மாதங்களுக்கு பின் கையில் எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார்.