அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் ஆபத்தான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் நாட்டை தலையேற்று நடத்த முடியாது என பிரபல உளவியல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல உளவியல் மருத்துவர்கள் குழு நேற்று Yale பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய Dr John Gartner என்ற உளவிய மருத்துவர் ஜனாதிபதி டிரம்ப் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
‘டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அவரது அன்றாட செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இச்செயல்கள் மூலம் டிரம்ப் ஆபத்தான மன நோயால் பாதிப்படைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் அமெரிக்காவை தலையேற்று நடத்துவது மிகவும் ஆபத்தானது.
டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்கும்.
அமெரிக்க குடிமக்களுக்கு ஜனாதிபதி டிரம்பின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையை தெரிவிக்க உளவியல் மருத்துவர்களான எங்களுக்கு தார்மீக கடமையும் உள்ளது’ என Dr John Gartner எச்சரிக்கை விடுத்துள்ளார்.