சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர், 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக மீட்பதற்காக அதிபர் ஆதரவு படையினர், தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மீதமுள்ள மக்களளை அங்கிருந்து தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். இவ்வாறு கடந்த வாரம் 16-ஆம் தேதி அலெப்போ நகரில் இருந்து மக்களை வெளியேற்றிய போது பேருந்துகள் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 68 குழந்தைகள் உட்பட 126 பேர் உயிரிழந்தனர். இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு, அல்-கொய்தாவின் முன்னாள் துணை அமைப்பு தான் காரணம் என்று சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அல்-கொய்தாவின் முன்னாள் துணை அமைப்பான ஜபாத் அல்-நுஷ்ரா, தொடக்கம் முதலே இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது படே அல்-ஷாம் ப்ரெண்ட் அமைப்பு அல்-கொய்தாவுடன் தனது இணைப்பபை தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளும் துருக்கி வழியாகவே கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில வாரங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலுக்கும் துருக்கி தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவும் ஒரு கொடூர தாக்குதலாக கருதப்படுகிறது.