முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, சுதேச விவகார மற்றும் கலாச்சார அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றின் மூலம் அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
சிங்கள புத்தாண்டு சுப நேரங்களை இழிவுபடுத்தாது சுப நேரங்களில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அது குறித்து பகிரங்க விவாதம் நடத்தப்பட வேண்டும்.
குறைகள் இருந்தால் அது தொடர்பில் பகிரங்க விவாதம் நடத்தத் தயார்.
சிங்கள புத்தாண்டு சுபநேரங்களை இழிவுபடுத்துவது இந்த நாட்டின் கலாச்சாரத்தை உதாசீனம் செய்வதாகும்.
புத்தாண்டு சுப நேரங்களை அமைச்சராகிய நானோ அல்லது ஜனாதிபதி, பிரதமரோ தயாரிக்கவில்லை.
கலாச்சார அமைச்சில் கடமையாற்றி வரும் 30 பேரைக் கொண்ட சிரேஸ்ட ஜோதிடர்களே இந்த நேரங்களை உருவாக்கினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் இருந்த போது அனைத்து சுப நேரங்களும் காலியில் இருந்த சுமனதாச ஜோதிடருக்கு தேவையான வகையில் உருவாக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போது அது மறந்து போய்விட்டது.
குறுகிய அரசியல் லாபத்தை ஈட்டிக் கொள்ள சிங்கள பௌத்த கலாச்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என அமைச்சர் நாவீன்ன, மஹிந்தவிடம் கோரியுள்ளார்.